ரிட்டையர் ஆக கொஞ்ச வருடங்களுக்கு முன் எல்லாரும் கேட்கிற ஒரு கேள்வி: "60 வயசுக்கு அப்புறம் என்ன பிளான்?" இப்போ சம்பளம் வருது, ஈ.எம்.ஐ (EMI) ஓடுது, வாழ்க்கையும் ஜாலியா போகுது. ஆனா 60 வயசுல ஆபீஸ்ல இருந்து மாசாமாசம் கணக்குல ஏறுற அந்த 'Salary Credited' மெசேஜ் நின்னதும் நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்? யோசிச்சு பார்த்திருக்கீங்களா? அப்போ நமக்குத் தேவைப்படும் ஒரே விஷயம்: பென்ஷன் (Pension) அல்லது நிலையான மாதாந்திர வருமானம். அதிர்ச்சியளிக்கும் உண்மைகள்! ஏதோ 60 வயசுதானே, அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருந்தா ஆபத்துதான். எதிர்கால புள்ளிவிவரங்கள் சொல்ற சில நிஜங்கள்: 2036-ல் இந்தியாவில் 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 23 கோடியை எட்டும். கூட்டு குடும்பங்கள் மறைந்துவிட்டன. 75% முதியவர்களுக்கு முறையான பென்ஷன் பாதுகாப்பு கிடையாது. மருத்துவ வசதிகள் வளர்ந்ததால் ஆயுட்காலம் அதிகமாகிறது; ஆனால் 60 வயதிற்கு மேல் மருத்துவச் செலவுகள் 3 மடங்கு அதிகரிக்கும்! பிரச்னையும் தீர்வும்! 6% பணவீக்க கணக்குப்படி, இன்னைக்கு ₹40,000 செலவு ஆகுற குடும்பத்துக்கு, இன்னும் 20 வருஷத்துல மாசம் ₹1,28,000 தேவைப்படும்! பணம் இல்லைனா சுயமரியாதைக்கே ஆபத்து. ஒரு சின்ன செலவுக்குக்கூட பிள்ளைகளிடம் கை ஏந்தி நிற்கும் நிலைமை மிகவும் கொடூரமானது. வயசான காலத்துல நமக்கு சோறும் முக்கியம். சுயமரியாதை அதைவிட முக்கியம்! 60 வயதில் மாசம் ₹1 லட்சம் ஓய்வூதியம் பெற, உங்களுக்கு ₹1.5 கோடி ஓய்வூதிய நிதியம் (Corpus) தேவை. இதை அடைவது எப்படி? 25 வயது: SIP (ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்) மூலம் மாசம் ₹4,500 முதலீடு செய்யுங்கள். 35 வயது: மாசம் ₹15,000 சேமிக்கத் தொடங்குங்கள். 45 வயது: மாசம் ₹45,000 தீவிரமாக முதலீடு செய்ய வேண்டும். பலன்: யாருடைய தயவும் இன்றி நிதி சுதந்திரத்துடன் கெத்தாக, நிம்மதியாக வாழலாம்! Bonds கார்ப்பரேட் பாண்டுகள் (Corporate Bonds) மூலம் நிலையான பென்ஷன்! சேர்த்த ₹1.5 கோடியில் இருந்து மாசாமாசம் நிலையான பென்ஷன் பெற கார்ப்பரேட் பாண்டுகள் சிறந்த வழி. கார்ப்பரேட் பாண்டுகள் என்பது பெரிய, நம்பகமான நிறுவனங்கள் பொதுமக்களிடம் கடன் வாங்கி நிலையான வட்டி தரும் முதலீடாகும். பாண்டுகளில் முதலீடு செய்ய 3 முக்கிய காரணங்கள்: அதிக வட்டி (Higher Yields): வங்கி FD-யை விட 1.5% - 3% கூடுதல் வட்டி தரும். நிலையான வருமானம் (Monthly Payouts): மாதாந்திர வட்டித் தொகை நேரடியாகக் கணக்கில் ஏறுவதால் பென்ஷன் போலப் பயன்படுத்தலாம். பாதுகாப்பு (Credit Rating): CRISIL அல்லது ICRA வழங்கும் AAA ரேட்டிங் கொண்ட நிறுவனங்களின் பாண்டுகள் உங்கள் முதன்மை முதலீட்டிற்கு அதிக பாதுகாப்பு தருகின்றன. இன்றே உங்கள் ஓய்வூதியத் திட்டமிடலைத் தொடங்குங்கள், ஓய்வுக்காலத்தில் ராஜாவாக வாழுங்கள்! நிலையான மாத வருமானம் / பென்ஷன் வேண்டுமா? Corporate Bonds முதலீட்டு வகுப்பு! உங்களுக்கு மாதாமாதம் நிலையான வருமானம் வேண்டுமா? கார்ப்பரேட் பாண்டுகளில் முதலீடு செய்வது எப்படி? தெரிந்துகொள்ள வரும் ஞாயிறு (August 09) காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்! பெயரை முன்பதிவு செய்ய: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/personal-finance/how-to-get-stable-pension-after-60-years-age




