சென்னை, தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு நாள் இன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. திருவாரூர் திருக்குவளையில் 1924 ஜூன் 3-ம் தேதி பிறந்தவர் கலைஞர் கருணாநிதி. 1957 முதல் 2018 வரை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர், 40 ஆண்டுகள் தி.மு.க. தலைவர், ஐந்து முறை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்று அசைக்க முடியாத ஆட்சி புரிந்தவர். கருணாநிதியின் 8வது நினைவுநாளையொட்டி, திமுக தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில் தி.மு.க. முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி குறித்த வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் அவர்கள்… — Udhay (@Udhaystalin) August 7, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/following-the-path-of-kalaignar-udhayanidhi-stalins-post




