நீலக்குறிஞ்சி மலர்கள் (Strobilanthes) மலையெங்கும் பூத்துக்குலுங்கி நீல நிறத்தில் காட்சியளிப்பதாலேயே நீலகிரி என்று காரணப்பெயரை கொண்டிருக்கிறது நீலகிரி மலை. குறிஞ்சி மலையான இங்கு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி முதல் 12, 18 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சியினங்கள் வரை பல்வேறு வகையான குறிஞ்சி பூக்களின் நிலமாக விளங்கி வருகிறது. வன வளத்தின் குறியீடாக ஆய்வாளர்கள் கருதப்படும் குறிஞ்சி மலர்கள் பெரிய அளவில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றன. அதிகரித்து வரும் அந்நிய களைத் தாவரங்களின் ஆக்கிரமிப்பு, காடழிப்பு, கட்டுமானங்கள், சாலை விரிவாக்கம் முறையற்ற வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் குறிஞ்சி புதர்களின் பரப்பளவு வேகமாகக் குறைந்து வருகின்றன. இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் தற்போது ஒட்டுமொத்தமாக குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன. குறிஞ்சி மலர்கள் கண்களுக்கு எட்டும் தொலைவு வரை நீலக் கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கும் நீலக் குறிஞ்சி மலர்களை நோக்கி தேனீக்கள் படையெடுத்து வருகின்றன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் இவை என்பது குறித்தும் வனத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், குறிப்பிட்ட பருவத்தில்தான் இந்தப் பகுதியில் பூத்துள்ளனவா பருவநிலை மாற்றத்தின் தாக்கம் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வுகளை முன்னெடுக்க உள்ளனர். கோவை அருகே காட்டு யானை – மனித எதிர்கொள்ளல். பரிதாபமாக உயிரிழந்த முதியவர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/environment/ooty-gudalur-kurijni-blooming-update




