கோவை, கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தவசி என்ற இளைஞரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். முன்னதாக கோவை போத்தனூர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சந்தோஷ், தவசி என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் சிறுமியை மிரட்ட பயன்படுத்திய அரிவாளை பறிமுதல் செய்ய இளைஞர் தவசியை போலீசார் அந்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்ற நிலையில் தவசி திடீரென தாக்குதல் நடத்தினார். தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தவசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி காயமடைந்தார். பலமுறை எச்சரித்தும் அரிவாளை கீழே போடாததால் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் இளைஞர் தவசி காயமடைந்தநிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/youth-who-attacked-female-police-inspector-shot-and-apprehended




