கோவை குனியமுத்தூரில் இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் 9-வது மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூறியதாவது:-நீதி துறையும், வழக்கறிஞர் துறையும் சந்தித்து வரும் கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நீதித்துறை, வரலாற்றில் இல்லாத அளவிற்கு பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் சட்டக்கல்லூரிகள் காளான்கள் போல் உருவாகி வருகின்றன. இதனால் சட்டக்கல்வி பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. பல சட்டக்கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், சில முக்கிய பாடங்கள் கற்பிக்கப்படுவதும் இல்லை. போதிய பயிற்சியும் வழங்கப்படுவதில்லை. பார் கவுன்சில் சட்டக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தை விட்டு, அதை சுயேச்சையான ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/lack-of-transparency-in-the-appointment-of-judges-justice-anand-venkatesh-speaks




