இந்தூர், காஸ்பியன் நாக பாம்பு கடித்து நாட்டில் முதல்முறையாக இமாசல பிரதேசத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் மிகக் கொடிய காஸ்பியன் நாகப் பாம்பு கடித்ததில் நாட்டில் முதன்முறையாக மனித உயிரிழப்புகள்பதிவாகியுள்ளதாக சர்வதேச மருத்துவ இதழில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் காஸ்பியன் வகை நாகப் பாம்புகள் கடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இந்தியாவில் இந்த அரிய வகை பாம்பு கடியால் அதிகாரப்பூர்வமாகப் பதிவான முதல் மனித உயிரிழப்புகள் இவை என்றும்'புதியஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. காங்ரா மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஓமேஷ் குமார் பாரதி தலைமையிலான ஆய்வுக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டு இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. பாம்பு கடித்தவர்களில் ஒருவர் தீவிர நச்சு பாதிப்பால் அடுத்த 30 நிமிடங்களிலேயே உயிரிழந்த நிலையில், மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் 72 மணி நேரத்தில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். இந்தவகை பாம்பின் விஷத்தில் அடங்கியுள்ள மிகக் கடுமையான இதய நச்சுத்தன்மையே குறுகிய நேரத்தில் மரணம் நிகழ முக்கியக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் சுட் டிக்காட்டியுள்ளனர். பொதுவாக மத்திய ஆசிய பகுதிகளில் பரவலாகக்காணப்படும் 'நஜா ஆக்சியானா' என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த காஸ்பியன் நாகம், கடந்த 2019ஆம் ஆண்டு சம்பாவின் திஸ்ஸா பகுதியில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது. தற்போது உள்ளூர் மீட்புக்குழுவினர் இந்த பாம்புகள் தாழ்வானபகுதிகளுக்கும் பரவி வருவதைக் கவனித்து எச்சரித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/caspian-cobra-bite-claims-countrys-first-life-in-himachal-pradesh




