சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வருகிற 10-ம் தேதியன்று பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழில் முதலீடுகள் தென் மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா 'செமிகண்டக்டர், ஏ.ஐ., சிப்' உள்ளிட்ட தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் 'செமிகான் மாநாடு, இந்த வாரம் தைவானில் நடக்கிறது. அந்நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு, தைவானில் வரும் 4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். முதல் முறையாக இந்நிலையில் தொழில் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினருடன் முதல்-அமைச்சர் விஜய் வரும் 10ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 16ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்து அந்நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர். இதன்படி தமிழ்நாடு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின், விஜய் முதல் முறையாக வெளிநாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/is-chief-minister-vijay-visiting-britain-to-attract-industrial-investments




