நாமக்கல், கொல்லிமலையில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தையும், கொடை தன்மையையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே வருகிற 3-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில் 8-ந் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/vallal-oori-festival-local-holiday-for-namakkal-district-on-august-3rd




