பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் கோவையில் இருந்து தேவனஹொந்தி வரை 340 கி.மீ தொலைவுக்கு எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. முத்தூரில் இருந்து தேவனஹொந்தி வரையிலான பகுதிகள் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்கப்படும் நிலையில், இருகூரில் இருந்து முத்தூர் வரையிலான 70 கி.மீ தொலைவிற்கு மட்டும் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய்கள் பதிக்கப்பட இருக்கிறது. விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்களை பதிப்பதால் விபத்து அபாயம் மட்டுமின்றி பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விளைநிலங்கள் வழியாகப் பெட்ரோலியக் குழாய் அமைப்பதால் நிலத்தின் மதிப்பு 75 சதவிகிதம் வரை குறைவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நிலத்தில் குழாய் இருப்பதால் வங்கிகளில் விவசாய கடன் பெற முடியாத சூழல் ஏற்படுவதாவும் குற்றம் சாட்டி வருகின்றனர். மற்ற பகுதிகளைப் போலவே சாலையோரமாகவோ அல்லது தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயோ இத்திட்டத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி காவல்துறை பாதுகாப்புடன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் வேலம்பாடி டோல்கேட் பகுதியில் இன்று காலை ஒன்று திரண்ட விவசாயிகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தீவிர போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என விவசாய சங்க நிர்வாகிகள் பலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/agriculture/tiruppur-farmers-protest-against-gas-pipeline-project




