சென்னை அரும்பாக்கத்தில் உள்ள துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ் கல்லூரியின் (தன்னாட்சி) 59-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார். விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ``கல்வி என்பது வெறும் கல்விச் சார்ந்த வெற்றியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. அது சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் பங்களிக்க வேண்டும். மாணவர்கள் தார்மீக விழுமியங்கள், நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் தேசக் கட்டமைப்பில் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும். ஆளுநர் அர்லேகர் மாணவர்களுக்கு ஒரு பரந்த பார்வையை வழங்கவும், சிறந்த பண்பு நலன்களை உருவாக்கவும், தேசக் கட்டமைப்பிற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கவும் தான் 'தேசிய கல்விக் கொள்கை' கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தக் கொள்கையின் நன்மைகளை முழுமையாக ஆராய்ந்து பார்க்காமல், தமிழ்நாட்டில் இதனை இதுவரை அமல்படுத்தாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இந்தியாவின் பாரம்பர்ய குருகுல கல்வி முறை இன்றளவும் வெளிநாடுகளில் பெரும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் குருகுல கல்வி முறைதான் 'மதராஸா கல்வி முறை' என்ற பெயரில் இங்கிலாந்தில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில் குருகுல கல்வி முறையை இதுவரை முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை" என்று குறிப்பிட்டார். "வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை வேண்டாம்" - அமித் ஷாவுக்கு அன்பில் பதில் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/governor-has-stated-that-national-education-policy-was-formulated-with-broad-perspective



