நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டாக்ஸிக்’ படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகை கியாரா அத்வானி கடந்த 2014ம் ஆண்டு ‘பேக்லி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கியாரா அத்வானி. அதன்பின் எம்.எஸ்.தோனி, கபீர் சிங், ஷெர்ஷா போன்று பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கடந்த 2023ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குழந்தை பிறந்த பிறகும் பிஸியாக நடித்து வரும் கியாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் தற்போது யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்துள்ளார். கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அவர் நாடியா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அவரின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அதிக கவனம் பெற்றது. நடிகர் யாஷ் தற்போது இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹுமா குரேஷி, தாரா சுட்டாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ எனப் பெயரிட்ட நாயகிகளின் அறிமுக வீடியோ வெளியானது. இதில், நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கோவா மாபியாவை மையமாகக் கொண்ட கதை 1940 முதல் 1970-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக ‘டாக்ஸிக்’ உருவாகியுள்ளது. முதலில் இந்தப் படம் கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடும் விமர்சனங்களை சந்தித்த டீசர் சமீபத்தில் வெளியான ‘டாக்ஸிக்’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலானது. அதே நேரத்தில், டீசரில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, சிலர் ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கருத்து தெரிவித்ததால், டீசர் சர்ச்சைக்கும் உள்ளானது. ‘தபாஹி’ பாடல் வெளியானது சமீபத்தில் ‘டாக்ஸிக்’ படத்தின் ‘தபாஹி’ பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடலை தமிழில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்படத்தின் ‘தடுமாறுதே’ பாடலை அண்மையில் வெளியிட்டிருந்தனர். தமிழில் விக்னேஷ் சிவன் எழுதிய இப்பாடலின் வீடியோவில் நடிகை நயன்தாரா புகைபிடிப்பது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது. கியாரா அத்வானியின் ‘நாடியா’ லுக் இந்நிலையில், நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘டாக்ஸிக்’ படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரில், இப்படத்தில் கியாரா அத்வானி ஏற்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘நாடியா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டைலிஷ் மற்றும் மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ‘டாக்ஸிக்’ படம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-kiara-advanis-birthday-toxic-film-team-releases-special-poster




