பாட்னா, ஓடும் ரெயில் டிக்கெட் பரிசோதகர் பரிசோதனை மேற்கொண்ட போது, முறையான டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த இளம்பெண் ஒருவர், திடீரென தனது ஆடையை கிழத்துக்கொண்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் தானாபூரிலிருந்து செகந்திராபாத் நோக்கி சென்ற தானாபூர்-செகந்திராபாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ராதிகா திவாரி (வயது 19) என்கிற இளம்பெண், இந்த ரெயிலில் செகண்ட் ஏசி வகுப்பில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்தநிலையில், டிக்கெட் பரிசோதகர் வழக்கமான தனது செக்கிங் பணியை செய்துக்கொண்டிருந்தபோது, இவர் டிக்கெட் இல்லாமல் திருதிருவென முழித்து உள்ளார். இவரிடம் டிக்கெட் கேட்டபோது. பணத்தை எடுத்து நீட்டி, இதை லஞ்சமாக வைத்துக்கொண்டு தன்னை தொடர்ந்து பயணம் செய்ய்ய அனுமதிக்குமாறு ராதிகா கேட்டுள்ளார். டிக்கெட் பரிசோதகர் மறுத்து, அபராதம் விதித்துள்ளார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த இளம்பெண் உடனே செல்போனை எடுத்து போன் செய்து. எனது அண்ணன் கூட டிடிஇ தான் பேசுருறியா? என்று கேட்டிருக்கிறார். ஆனால், டிக்கெட் பரிசோதகர் எதற்கும் அசைந்துக்கொடுக்கவில்லை. அபராதம் கட்ட வேண்டும் என்று விடாப்பிடியாக சொல்லிவிட்டார். இதனால் கோபம் அடைந்த ராதிகா.உன்னை தண்ணியில்லாத காட்டுக்கு மாற்றிவிடுவேன் பார்த்துக்கோ என்று மிரட்டியும் உள்ளார். ஆனால், எதையும் டிக்கெட் பரிசோதகர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ராதிகா. சட்டென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது மேலாடையை கிழித்துக்கொண்டார். பின்ன தன் வீட்டுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு டிக்கெட் பரிசோதகர் தன்னுடைய ஆடையை தொட்டதாகவும், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் பொய்யாக குற்றம்சாட்டினார். அதுமட்டுமல்லாது 112 அவசர உதவி எண்ணுக்கு அழைத்து புகார் கொடுப்பேன் என்றும் கூறி மிரட்டி உள்ளார். இதனை தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து ரெயில் உத்தரப் பிரதேசத்தின் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா ஜங்ஷனுக்கு வந்ததும், அங்கு தயாராக இருந்த ரெயில்வே போலீசார் பெண்ணை இறக்கி விசாரணை நடத்தினர். சக பயணிகள், அந்த பெண் நடந்துக்கொண்ட விதம் தொடர்பான வீடியோ ஆதாரம் காட்டியதை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் டிக்கெட் பரிசோதர் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ராதிகாவுக்கு ரூ.1000 விதிக்கப்பட்டு, டிக்கெட் வழங்கப்பட்டு அங்கிருந்து அப்பெண் வேறு ரெயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/he-is-touching-my-clothes-woman-without-ticket-argues-with-tte-tears-her-own-clothes-and-allegedly-threatens-him-with-a-case-watch




