அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கணித ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோ வழக்கு பாப்பாரப்பட்டி போலீஸ் காலனியை சேர்ந்த தங்கவேல் (48), கணித ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கான சிறப்பு வகுப்புக்கு வந்த மாணவி ஒருவரை வாழ்த்தி பரிசுப்பொருள் கொடுப்பதுபோல் அடிக்கடி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டும், வாட்ஸ் ஆப்பில் ஆபாச பதிவுகளை அனுப்புவது போன்ற செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். நாளாக நாளாக அவருடைய பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனக்கு ஆசிரியரால் நடந்துவரும் பாலியல் துன்புறுத்தலை பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சி அடைந்தவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். தங்கவேல் அதில் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட வந்துள்ளனர். இந்நிலையில் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகாரைப் பெற்று, விசாரணை நடத்தி புகாரில் முகாந்திரம் உள்ளது உறுதியானவுடன் கணித ஆசிரியர் தங்கவேல் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/maths-teacher-arrested-against-pocso-case




