நடிகை நளினி தனது 62-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதைதொடர்ந்து அவரது தம்பி 62 புடவைகளை அவருக்கு பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். 1980 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நளினி. டி. ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தில் அறிமுகமான நளினி ஓய்வெடுக்க நேரமின்றி பிசியாக நடித்து கொண்டிருந்தார். இவர் 1987ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராமராஜன், நளினி தம்பதிகளுக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில், 2000-ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக ராமராஜனை விவாகரத்து செய்தார். விவாகரத்திற்குப் பின் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துச் சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் நடிகை நளினி தனது 62-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதைதொடர்ந்து அவரது தம்பி 62 புடவைகளை அவருக்கு பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நளினிக்கு புடவை என்றால் தனி பிரியம். ஒரு முறை கட்டிய புடவையை அவர் திரும்ப கட்டுவதில்லை. தினமும் புதுப்புடவைதான் அணிவார். புடவை வைப்பதற்கு என்று தனி வீடே வைத்துள்ளார் நளினி. நளினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது. அதில் அவருக்கு புடவையால் யாரோ அபிஷேகம் செய்வது மாதிரி, புடவை குவியல் சுற்றி அவர் நெகிழ்ச்சியுடன் அமர்ந்து இருப்பது மாதிரியான அந்த வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். என்ன நடந்தது, யார் கொடுத்த பரிசு என்று நளினியிடம் கேட்டால், “என் பிறந்தநாளை முன்னிட்டு என் தம்பி கார்த்திக் கொடுத்த மறக்க முடியாத பரிசு அது. அமெரிக்காவில் இருக்கும் அவர் என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் ஆக வந்து, என்னை துாக்கத்தில் இருந்து எழுப்பி அந்த பிறந்தநாள் பரிசை கொடுத்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, 62 புடவைகளை பரிசாக கொடுத்தார். அந்த எண்ணிக்கை அதிகம் என்பதால் அப்படி என்னை சுற்றி குவிந்துவிட்டது. அந்த வீடியோ வைரல் ஆகிவிட்டது. அந்த பிறந்தநாளை, அந்த பரிசை, என் தம்பியை நான் எப்படி மறக்க முடியும்” என்கிறார் View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-nalinis-younger-brother-gifted-her-62-sarees-on-her-62nd-birthday




