சென்னை, தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக, த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10-ந் தேதி பதவியேற்றார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அரசுப் பணிகவனித்து வருகிறார். தற்போது, 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அவர், தினமும் ஒவ்வொரு துறைகளின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, கிராமங்களில் உள்ள மக்களுக்கு அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்றும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளின் சாலை மேம்பாடு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்று சேர வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை திட்டங்கள் சில பயனாளிகளுக்கு முறையாக சேர்வதில்லை என புகார்கள் வருகின்றன. திட்டங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்படுவதுடன், பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/all-schemes-should-reach-the-people-in-villages-chief-minister-vijay-orders




