நடிகை கயாடு லோஹாருக்கு Most Celebrated Heroine' விருது வழங்கப்பட்டது. விருதை வழங்கிய இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ```கோட்’ படம் ரிலீஸாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. ஒரே வாரத்தில்தான் `மங்காத்தா’ தினமும் வரும். `கோட்’ தினமும் வரும். விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வரும். `கோட்’ 2 Years-க்காக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறோம். அதில் நாங்கள் இதைவிட பெரிய Manifestation செய்திருக்கிறோம்" என்றும், ``நானும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகன். `லுங்கி பாய்ஸ்’ வீடியோவைத் தவறாமல் பார்த்துவிடுவேன். நாங்கள் பெரிய பொருட்செலவில் என்டெர்டெயின் செய்கிறோம். டிஜிட்டல் கிரியேட்டர்கள் ஒன்றுமே இல்லாமல் எங்களையே என்டெர்டெயின் செய்கிறார்கள். எங்கே போனாலும் நண்பர்களை விட்டு விடாதீர்கள். `பணம் நிக்குதோ, இல்லையோ. நண்பர்கள் நிற்பார்கள்.’ இது `சென்னை 28’ படத்தின் 100-வது நாள் விழாவில் ரஜினி சார் எனக்குச் சொன்னது. அதையே நானும் இங்கே கூறுகிறேன்" என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/director-vekat-prabhu-speech-at-vikatan-digital-awards-2026



