கோவை, காவலர்களுக்கு விடுமு றையே கிடையாது.தற்பொ ழுது வந்துள்ள புதிய அரசு, காவலர்கள்ஒருநாள்விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதுகாகிதஅளவில் மட்டுமே இருக்கிறது. அரசு காவலர்களுக்கு விடுப்பு தர வேண்டும்."என நடிகர் கார்த்தி பேசியுள்ளது பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நடந்த முன்னாள் காவல் துறை அதிகாரிகள்பொதுநல அறக்கட்டளையின் 10-ஆம் ஆண்டு விழாவில் நடிகர் கார்த்தி சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசியதாவது, நான் பள்ளியில் படிக்கும்போது, சென்னையில் இருந்தாலும் கோவை பையன் தான் என்று கூறுவேன். கோவை எனக்கு பிடித்த ஊர். சினிமாவில் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று வந்த என்னை நீங்கள் கொடுத்த இடம் மிகப்பெரியது. சினிமாவுக்காக பல ஆய்வுகள் செய்வேன். அண்ணன் சூர்யா, 'காக்க காக்க' படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்தார். அதன் பிறகு நான் போலீஸ் ஆபீசராக நடித்தேன். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருபவை அனைத்தும் உண்மைதான். காவல்துறை மீது விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இன்னும் உண்மையான அதிகாரிகள் இருப்பதால்தான் நாமெல்லாம் நிம்மதியாக உறங்குகிறோம். சோசியல் மீடியா தாக்கம் காவல்துறையில் அதிகமாக உள்ளது. சோசியல் மீடியா வில் எந்த குற்ற சம்பவங்கள் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மக்களாகிய நாம் தரும் அழுத்தம் காரணமாக காவல் துறையால் ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்க முடியவில்லை. காவலர்களுக்கு விடுமுறையே கிடையாது. ஆனால் தற்பொழுது வந்துள்ள புதிய அரசு காவலர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அது காகித அளவில் மட்டுமே இருக்கிறது. காவலர்களுக்கு விடுப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/we-sleep-peacefully-only-because-of-the-police-officers-actor-karthi




