சென்னை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், படகோட்டப்போட்டி பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணனுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- வெண்கலப் பதக்கம் ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் படகோட்டப்போட்டி பெண்கள் டிங்கி பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அவரது இச்சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். திறமை, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் அவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார். வாழ்த்துகள் படகோட்ட வீராங்கனை நேத்ரா குமணனின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். எதிர்காலத்திலும் அவர் பல வெற்றிகளை பெற்று புதிய சாதனைகளை படைத்திட வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/asian-games-chief-minister-vijay-congratulates-tamil-nadu-rower-nethra-kumanan-for-winning-bronze-medal




