யு.பி.ஐ. பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியது. 14-வது நாள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 14-வது நாள் அமர்வு நேற்று நடைபெற்றது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியவுடன், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாயி அணு விபத்தின் நினைவு தினத்தையொட்டி, அந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது. இதனைத்தொடர்ந்து கேள்வி நேரம் எடுக்கப்பட்டபோது உள்துறை மந்திரி அமித்ஷா அவைக்கு வந்து பதில் தெரிவிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். பதாகைகளுடன் அவையின் மையப்பகுதிக்கும் வந்தனர். அமளியால் ஒத்திவைப்பு இந்த அமளியால் மக்களவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பகல் 12 மணி வரை ஒத்திவைத் தார். பின்னர் 12 மணிக்கு கூடியபோது நாடாளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி கிரண் ரிஜிஜூக்கும், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வுக்கும் இடையே விவாதம் நடந்தது. பின்னர் அமளி காரணமாக பிற்பகல் 2.15 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. திருத்த மசோதா பிற்பகல் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியது. அப்போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத்தொடர்ந்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்தம்) மசோதா-2026ஐ தாக்கல் செய்தார். இந்த மசோதா, 2007-ம் ஆண்டின் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம், 2025-ம் ஆண்டின் வருமானவரி சட்டம் மற்றும் 2026-ம் ஆண்டின் நிதிச்சட்டம் ஆகியவற்றை மேலும் திருத்துகிறது. பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் மற்றும் வருமான வரி சட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை நீக்குகிறது. அது போல யு.பி.ஐ. மற்றும் ரூபே அட்டை பரிவர்த்தனைகளுக்கான பூஜ்ஜிய வணிகர் தள்ளுபடி கட்டணம் (எம்.டி.ஆர்.) என்ற கட்டமைப்பை மாற்றிய மைக்க அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிக்கிறது. யு.பி.ஐ. கட்டணம் தற்போது, யு.பி.ஐ. மற்றும் ரூபே அட்டைகள் மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு பயனாளர்களிடம் வங்கிகளோ அல்லது கட்டணச் சேவை வழங்குபவர்களோ எந்த கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இது இனி மாறும் என தெரிகிறது. ஆனால் சாதாரண மக்களுக்கு பாதிப்பு இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது. கட்டணம் பிடிப்பதற்காக, பணம் அனுப்புவதில் ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சில விஷயங்களில் வரிச்சலு கையை மேலும் அதிகரிக்கவும், காலத்தை நீட்டிக்கவும் மசோதா வழி செய்கிறது. விவாதம் இல்லை இந்த மசோதாவை விவாதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை எனக்க ருதி அதன் மீது விவாதம் நடத்தப்படாமலேயே மசோதா நிறைவேற்றத்துக்காக குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே மாநிலங்களவை 2.15 மணிக்கு கூடியதும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிதி ஒதுக்கீட்டு மசோதாவை (3-வது எண்) தாக்கல் செய்தார். இது மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி முடிவடைந்த நிதியாண்டில், அனுமதிக் கப்பட்ட தொகையை தாண்டிச் செலவிடப்பட்ட குறிப்பிட்ட சேவைகளுக் கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி யில் இருந்து நிதி ஒதுக்கீட்டை செய்ய இந்த மசோதா வழி செய்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பல்வேறு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, மக்கள் வைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/lok-sabha-passes-bill-to-authorise-govt-to-permit-banks-to-levy-charges-on-upi-transactions




