Article complet
ஒரு காலத்தில் சூரியன் மறையாத பேரரசு எனக் கூறப்பட்ட பிரிட்டிஷ் அரசு, இப்போது நிலையான ஆட்சியாளர்கள் இல்லாமல் தத்தளிக்கிறது. பிரிட்டிஷ் மக்களுக்கு வரிசைகளில் நிற்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பார்கள். இப்போது பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான '10 டவுனிங் தெரு' வாசலிலும் அடுத்தப் பிரதமர் நான் என ஒரு நீண்ட வரிசை உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கு காரணம் இருக்கிறது. பிரிட்டன் அரசியல் வரலாற்றில் கடந்த பத்தாண்டுகளாகப் பிரதமர் நாற்காலி யாரிடமும் நிலையாக இல்லை. லிஸ் ட்ரஸ் 2024-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஆறாவது பிரதமராகப் பொறுப்பேற்றவர் சர் கெய்ர் ஸ்டார்மர். ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் கூட முழுமையடையாத நிலையில், தன் ஆதரவாளர்களாலேயே ஓரங்கட்டப்பட்டு, பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவருக்குப் பதிலாக, மேக்கர்ஸ்ஃபீல்ட் நாடாளுமன்ற உறுப்பினரும், கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியின் முன்னாள் மேயருமான ஆண்டி பர்ன்ஹாம் அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார். இந்த வீழ்ச்சி ஸ்டார்மரின் வீழ்ச்சி மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்களை வீழ்த்திய பிரிட்டனின் வீழ்ச்சி. அப்படி வீழ்ந்த பிரிட்டன் பிரதமர்கள் குறித்து சுருக்கமாகப் பார்க்கலாம். லெட்டூஸ் கீரையிடம் தோற்ற லிஸ் ட்ரஸ்: கடந்த 2022 செப்டம்பரில் பிரதமராகப் பொறுப்பேற்ற கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் லிஸ் ட்ரஸ், வெறும் 44 நாட்கள் மட்டுமே பதவியில் நீடித்தார். 'நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கிறேன்' என்று கூறி, பெரும் பணக்காரர்களுக்குப் பயனளிக்கும் வகையில் 45 பில்லியன் பவுண்ட் வரிக்குறைப்புத் திட்டத்தை அவர் அறிவித்தார். கடுமையான வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் மக்கள் இதனை வன்மையாக வெறுத்தனர். 'டெய்லி ஸ்டார்' என்ற பத்திரிகை, ஒரு லெட்டூஸ் கீரை அழுகுவதற்குள் லிஸ் ட்ரஸ் பதவி விலகிவிடுவார் என்று பந்தயம் கட்டியது. இறுதியில், லெட்டூஸ் கீரை அழுகுவதற்கு முன்பே லிஸ் ட்ரஸ் வீழ்ந்தார். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் சுனக்கின் 'கற்பனைப் பொருளாதாரம்' மற்றும் வீழ்ச்சி: லிஸ் ட்ரஸ்ஸைத் தொடர்ந்து நாட்டின் முதல் இந்திய வம்சாவளிப் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றார். ட்ரஸ்ஸின் பொருளாதாரக் கொள்கைகளை 'கற்பனைப் பொருளாதாரம்' என்று முன்பே எச்சரித்த சுனக்கிடம், 'இந்தக் குழப்பத்தைச் சரிசெய்யுங்கள்' என்று அரசின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. 'அவர் பிரிட்டனை இந்தியாவுக்கு விற்றுப் பழிவாங்குவார்' என்று நகைச்சுவையாளர்கள் கிண்டலடித்தனர். சுமார் 20 மாதங்கள் பதவியில் இருந்த சுனக், குடியேற்றத்தைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், 2024 தேர்தலில் தோல்வியடைந்து தொழிலாளர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மரிடம் ஆட்சியை ஒப்படைத்தார். சர்ச்சைகளின் நாயகன் போரிஸ் ஜான்சன்: லிஸ் ட்ரஸ் முன்பு பிரதமராக இருந்தவர் போரிஸ் ஜான்சன். கலைந்த தலைமுடியுடன் வலம் வந்த அவர், "பிரெக்ஸிட்டை (பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது) முடித்துவிடுவேன்" என்று கூறி, அதனைச் செய்தும் காட்டினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் பிரிட்டனின் மருத்துவக் கொள்கைகளை வழிநடத்தினார். ஆனால், நாடு முழுவதும் கடுமையான கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் விதிகளை மீறி விருந்துகளை நடத்திய 'பார்ட்டிகேட்' (Partygate) சர்ச்சை அவரது பதவியைப் பறித்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடித்த அவரது ஆட்சி அவதி அவதியாக முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பிரெக்ஸிட் புதிரில் சிக்கிய தெரசா மே மற்றும் கேமரூன்: போரிஸ் ஜான்சனுக்கு முன்பு பிரதமராக இருந்த தெரசா மே, 'பிரெக்ஸிட்'ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரும்பாடுபட்டார். ஆனால், அவர் கொண்டு வந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் மூன்று முறை நிராகரித்ததால், அவமானத்துடன் அவர் பதவி விலக நேர்ந்தது. இத்தனை பதவி இழப்புக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் டேவிட் கேமரூன். தனது கட்சியின் ஒற்றுமைக்காக 2016-ல் பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பை நடத்திய அவர், மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வாக்களித்ததும், அதிர்ச்சியடைந்து 'நான் கிளம்புகிறேன்' என்று கூறி பதவி விலகினார். ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கேமரூன் தொடங்கி, தற்போது இரண்டாண்டுக்குள்பதவியை இழந்துள்ள ஸ்டார்மர் வரை பிரிட்டன் அரசியல் ஒரு நிலையற்ற தன்மையிலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்ததாகப் பொறுப்பேற்கும் ஆண்டி பர்ன்ஹாம் இந்த வரிசைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.! Keir Starmer: ``பதவியை விட்டு விலகுகிறேன்; ஆனால்.."- நா தழுதழுக்கப் பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous



