தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “ஊழல்தான் அரசியலுக்கு புற்றுநோய். அதை முழுவதுமாக அகற்ற வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முயற்சி செய்து வருகிறார். அரசாங்கத்தில் நேர்மையான அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள். அதே சமயம், ஊழல் செய்து பணம் சேர்த்த அதிகாரிகளும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அதிகாரிகள் சிலர் இந்த அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எந்த கோப்புகளும் நகர்வது கிடையாது. அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து முக்கிய இலாகாக்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் விஜய்யிடம் நான் வலியுறுத்தினேன். புதிதாக வந்த அதிகாரிகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.” இவ்வாறு வைகோ தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/some-people-want-to-bring-the-government-to-a-standstill-vaikos-remarks




