சென்னை, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- குழந்தைகள் நலனுக்கான(Childline) (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. ஊதியம் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு சேவை பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பு சேவை இன்னும் சிலர் இந்த பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம். எனவே குழந்தைகள் பாதுகாப்பு சேவை பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையை தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/child-protection-service-workers-should-be-paid-their-arrears-immediately-udhayanidhi-stalin




