சென்னை, இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுள்ளது. தேர்தல் பணிக்குழு நியமனம் இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ஆம் நடைபெறுகிற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பின்வருமாறு தேர்தல் பணிக்குழு நியமிக்கப்படுகிறது. வாக்குச்சாவடி வாரியாக துணைக்குழுக்களை அமைத்திட இக்குழு வழிகாட்டுதல்களை வழங்கும். தோழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். மதுராந்தகம் மேற்பார்வையாளர்கள் ரவிக்குமார் -பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் வன்னிஅரசு -சமூகநீதித்துறை அமைச்சர் ஒருங்கிணைப்புக் குழு எஸ்.எஸ்.பாலாஜி மாநிலப் பொருளாளர், இளஞ்சேகுவேரா தலைமைநிலையச் செயலாளர், எழில்கரோலின் துணைப் பொதுச்செயலாளர், சூ.க.விடுதலைச் செழியன் மேனாள் மண்டலச் செயலாளர், செய்யூர் பொன்னிவளவன் மண்டல துணைச் செயலாளர், கீழ்.கா.அன்புச்செல்வன் மாவட்டச் செயலாளர், எல்.இ.பி. ஜோதிமணி சட்டமன்ற உறுப்பினர், தகடூர் தமிழ்ச்செல்வன் தலைமைநிலையச் செயலாளர், செங்கை தமிழரசன் மாநில அமைப்புச் செயலாளர், சூ.க.ஆதவன் மண்டலச் செயலாளர், பருத்திகுளம் சேகர் மண்டல துணைச் செயலாளர் (பொது நிர்வாகம்). தாராபுரம் மேற்பார்வையாளர்கள் சிந்தனை செல்வன் - பொதுச் செயலாளர் கு.கா.பாவலன் - மாநில செய்திதொடர்பாளர் ஒருங்கிணைப்புக் குழு வெ.கனியமுதன் மாநில துணைப் பொதுச் செயலாளர், சேலம் நாவரசன் மாநிலச் செயலாளர்-தேர்தல் பணிக்குழு, ரா.ஆதி மொழி முதன்மைச் செயலாளர்-மகளிர் விடுதலை இயக்கம், ஓவியர் மின்னல் மண்டல துணைச் செயலாளர், ஈரோடு விநாயகமூர்த்தி மேனாள் மாவட்டச் செயலாளர், ச.ரஜினி காந்த் மாநில துணைப் பொதுச் செயலாளர், சுசி கலையரசன் மேனாள் மண்டலச் செயலாளர், ஜாபர் அலி மண்டலச் செயலாளர், தமிழ்முத்து மண்டல துணைச் செயலாளர் (பொது நிர்வாகம்), க.முருகவேல் மாவட்டச் செயலாளர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/madhuranthakam-and-dharapuram-by-elections-vck-appoints-election-task-force




