கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரபல பெண் யூடியூபர் ஒருவர் வீட்டில் 118 பவுன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ரூ.50,000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொள்ளை நடந்த சில தினங்களிலேயே அவர் மீண்டும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி ரீல்ஸ் வெளியிட்டு வருவது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. கொள்ளைச் சம்பவம் நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வினோத்குமார். இவரது மனைவி மதுமிதா. இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதியினர் சமூக வலைதளங்களில் தங்களது தங்க நகைகள் மற்றும் பணக் குவியல்களைக் காட்டி தொடர்ந்து வீடியோக்களைப் பதிவிட்டு வந்துள்ளனர். "நாங்க மாசம் மாசம் தங்கம் வாங்குறோம், நீங்களும் வாங்குங்க"என பெருமையாகப் பேசி வீடியோக்கள் பதிவிட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கடந்த 24-ந்தேதி அன்று இவர்களது குடும்பத்தினர் துணிக்கடைக்குச் சென்றிருந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைக்குப் பின் நடந்த ட்விஸ்ட் இவ்வளவு பெரிய திருட்டு நடந்து, போலீசார் வீட்டில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையிலும், மதுமிதா தனது ரீல்ஸ் மோகத்தைக் கைவிடவில்லை. கொள்ளை நடந்த அடுத்த சில தினங்களிலேயே அவர் 6 புதிய ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். பணமழை ரீல்ஸ் அந்த புதிய வீடியோக்களிலும் அவர் தனது குழந்தையின் மீதும், படுக்கையிலும் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளி வீசி "பண மழையில் குளிப்பது" போன்ற காட்சிகளைப் பகிர்ந்துள்ளார். இந்த வினோதமான செயலால் அவரது வீடியோக்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 30 லட்சம் (3 மில்லியன்) வியூஸைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் 4.50 லட்சமாக உயர்ந்துள்ளது. நெட்டிசன்களின் கடும் விமர்சனம் 118 பவுன் நகை திருடுபோன பிறகும் சிறிதும் கவலையோ, பயமோ இல்லாமல் மீண்டும் பணத்தைக் காட்டி ரீல்ஸ் போடுகிறாரே என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். "இதனால்தான் திருட்டே நடந்தது, இன்னும் பாடம் கற்கவில்லையா?" என்றும், "வியூஸுக்காகவும் விளம்பரத்திற்காகவும் விளம்பர உத்தியாக இப்படி செய்கிறாரா?" என்றும் இணையத்தில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. எனினும், சமூக வலைதளப் பக்கங்களின் மூலமே கொள்ளையர்கள் வீட்டைக் கண்காணித்திருக்கலாம் என்பதால் போலீசார் இந்த ரீல்ஸ் வீடியோக்களையும் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். Influencer Madhumitha | 118 பவுனை பறிகொடுத்தும் அடங்காத பிரபலம் - மீண்டும் பணத்தில் குளித்து ரீல்ஸ் — Thanthi TV (@ThanthiTV) September 28, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/celebrity-undeterred-even-after-losing-118-sovereigns-of-goldbathes-in-a-shower-of-cash-again-for-reels




