மாட்ரிட், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 17 பேர் பலி இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 19 பேர் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் நேற்று முன் தினம் ஸ்பெயினுக்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழைய முயற்சித்தனர். ஸ்பெயினின் மல்ரோகா தீவு அருகே சென்றபோது அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணித்த சட்டவிரோத அகதிகள் 17 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். எஞ்சிய 2 பேர் நீந்தி அருகில் உள்ள தீவுக்குள் நுழைந்து உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/spain-refugee-boat-capsizes-17-dead




