AI வளர்ச்சியைப் பற்றி உலகம் முழுவதும் விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், இந்தக் கேள்விக்கு NVIDIA CEO Jensen Huang கொடுத்த பதில் இப்போது கவனம் பெற்றிருக்கிறது. 2030-ம் ஆண்டு உலகத்தின் முடிவாக இருக்காது. அதற்கான வாய்ப்பு 0%. இதுதான் Huang-ன் கருத்து. தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு அளித்த பேட்டியில், 2030-க்குள் AI உலக அழிவுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை தான் முற்றிலும் ஏற்கவில்லை என்று Huang தெரிவித்துள்ளார். ஆனால்.ஏன் இந்தக் கேள்வி எழுந்தது? AI வளர்ச்சி வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த எச்சரிக்கைகளும் அதிகரித்துள்ளன. Anthropic நிறுவனத்துடன் தொடர்புடைய சில AI safety researchers, மிகவும் சக்திவாய்ந்த AI systems எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சமீபத்தில் எச்சரித்திருந்தனர். Anthropic researcher Evan Hubinger, அடுத்த பத்தாண்டுக்குள் AI மனித அழிவுக்கு வழிவகுக்கும் வாய்ப்பு 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கலாம் என்று தனிப்பட்ட கருத்தாக தெரிவித்திருந்தார். இது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணிப்பு அல்ல. Ai இதையடுத்து, “AI development-ஐ இன்னும் வேகமாகத் தொடர வேண்டுமா அல்லது கொஞ்சம் slow down செய்ய வேண்டுமா?” என்ற விவாதம் தீவிரமானது. “வேகத்தை குறைக்க வேண்டாம்!” இந்தக் கேள்வியிலும் Jensen Huang-ன் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. AI development-ஐ “as fast as we can” என்ற வேகத்தில் முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஒரு முக்கியமான நிபந்தனையையும் சேர்த்திருக்கிறார். வேகமாக வளர்ப்பது வேறு தயாராகாத, பாதுகாப்பற்ற AI product ஐ வெளியிடுவது வேறு. Products ready ஆகும் முன்போ அல்லது unsafe ஆக இருக்கும்போதோ அவற்றை வெளியிடக்கூடாது என்பதையும் Huang வலியுறுத்தியுள்ளார். AI-யைப் பார்த்து AI நிறுவன தலைவர்களுக்கே பயமா? “வேகத்தைக் குறைப்போம்” வாதத்தின் பின்னணி என்ன? AI உலகில் இரண்டு வேறு பார்வைகள்! இதுதான் இந்த விவாதத்தை இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. ஒருபக்கம், Anthropic CEO Dario Amodei உள்ளிட்ட சில AI leaders, AI capabilities வேகமாக அதிகரிப்பதால் development-ன் pace-ஐ carefully control செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மறுபக்கம், Jensen Huang, AI வளர்ச்சியை நிறுத்துவதோ அல்லது வேகத்தை குறைப்பதோ தேவையில்லை; வேகத்துடன் safety-யையும் சேர்த்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்கிறார். அதாவது, விவாதம் “AI-யை உருவாக்கலாமா, வேண்டாமா?” என்பதல்ல. “AI-யை எவ்வளவு வேகமாக உருவாக்க வேண்டும் அதை எப்படிப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்?” என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது. NVIDIA CEO 2030-க்கு என்ன நடக்கும்? இதற்கு தற்போது யாரிடமும் உறுதியான பதில் இல்லை. Jensen Huang-ன் 0% chance என்பது அவருடைய மதிப்பீடு; அது எதிர்காலத்தை நிரூபிக்கும் அறிவியல் உத்தரவாதம் அல்ல. அதேபோல், AI மனித அழிவுக்கு வழிவகுக்கும் என்று கூறும் researchers-ன் கருத்துகளும் எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகள் மற்றும் தனிப்பட்ட risk assessments தான். ஆனால் ஒன்று மட்டும் தெளிவு. AI-ன் வேகம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதைவிட வேகமாக, அதை எப்படி பாதுகாப்பாகக் கையாள்வது என்ற விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது. 2030 வரும்போது யாருடைய கணிப்பு சரியாகும் என்பது தெரியாது. ஆனால் அந்த எதிர்காலத்தை உருவாக்கப் போகும் technology-ஐ இன்று நாம் எப்படி உருவாக்குகிறோம் என்பதுதான் முக்கியம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/technology/will-the-world-end-in-2030-nvidia-ceo-jensen-huang-says-0-chance



