கதைகளை வெறும் காட்சிகளாக இல்லாமல், பார்ப்பவர்களின் மனதில் நிற்கும் அனுபவங்களாக உருவாக்கும் சேனல், `Finally’. சுவாரஸ்யமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை என ஒவ்வொரு படைப்பிலும் தனக்கென ஒரு பாணியைப் பின்பற்றிவருகிறது இந்த சேனல். இன்றைய டிஜிட்டல் தலைமுறையின் ரசனைக்கேற்ப வித்தியாசமான கதைகளைச் சொல்லிவரும் Finally சேனலுக்கு `Best Fiction Channel’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை நடிகர் ரியோ வழங்க, `Finally’ குழு பெற்றுக்கொண்டது. விருதை வழங்க வந்த நடிகர் ரியோ பேசுகையில் ``டிஜிட்டல் கிரியேட்டர்ஸ் எல்லாரையும் ஒன்றாகப் பார்ப்பதில் மகிழ்ச்சி" என்றும் ``எனக்கு மிகவும் பிடித்த சேனல் `Finally’. இதில் கிரேசி மோகனின் சாயல் தெரியும்" என்றும் கூறினார். ``இந்த சேனலுக்கு முன்பு, ஏழு சேனல்கள் வைத்து எதுவுமே சரியாகப் போகாததால் இறுதியாகத் தொடங்கிய இந்த சேனலுக்கு 'Finally' என்று பெயர் வைத்தார்கள்" என்ற தகவலையும் நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார். தொடந்து பேசிய நடிகர் ரியோ, ``டிஜிட்டல் கிரியேட்டர்ஸ் எல்லாரையும் ஒன்றாகப் பார்ப்பதில் மகிழ்ச்சி. ரிவர் ரூட் ஸ்டூடியோ சார்பில் ஒரு படம் தயாரிக்கிறோம். அதில் என்னைத் தவிர எல்லோரும் அறிமுகத் திறமையாளர்கள். எல்லோருமே டிஜிட்டலிலிருந்து வந்தவர்கள். சின்ன வயதில் 'எல்லோரும் ஒன்றாக ஒரே கம்பெனியில் வேலை செய்வோம்' என நண்பர்களுடன் பேசியிருப்போம். அதைச் செய்து பார்ப்பதற்காகத்தான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினோம். `பிரவுன் மணி’ உங்களுடைய நண்பர்களுடன் தியேட்டரில் வந்து ஜாலியாகப் பார்க்கவேண்டிய படம். ராம் நிஷாந்த், கவி என இரண்டு பையன்களைப் பற்றிய கதை. ஹீரோயினே கிடையாது. தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கிறேன் என்றவுடன், 'இதையும் சேர்த்துச் செய்து ஒன்றாகப் பயணிப்போம்' எனக் கூறியது என் மனைவி ஸ்ருதிதான். `ஜோ’ படத்துக்குத் தயாரிப்பாளர்களை அணுகியபோது, `அசிஸ்டன்ட் டைரக்டரை நம்பி எப்படிப் படம் எடுப்பது?’ என்றனர். அப்போது என் மனைவிதான் ஒரு தொகையைக் கொடுத்து அந்தப் படத்துக்காக பைலட் வெர்ஷன் எடுக்கச் சொன்னார். அப்படித்தான் `ஜோ’ படம் நடந்தது. இப்போது தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனமும் அவரால் சாத்தியப்பட்டதுதான்.’’ எனக் கூறி நெகிழ்ந்தார். விருதைப் பெறறுக்கொண்ட `Finally’ குழுவின் சார்பாகப் பேசிய பரத், "2015-ல் சென்னைக்கு வந்தபோது நடிகர் ரியோவை தூரத்தில் பார்த்து அவரைப்போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் இன்று அவர் கைகளாலேயே விருதைப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்றும், ``யூடியூப்பில் வீடியோ செய்ய முடியவில்லை என்றால் எல்லாரும் 'I Quit YouTube' என வீடியோ போடுவார்கள். நான் 'Thank you YouTube' என வீடியோ போட வேண்டும் என நினைக்கிறேன்" என்று கூறினார்.பேசிய முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/actor-rio-speech-at-vikatan-digital-awards-2026



