சென்னை, ‘அரசன்’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவில்லை என்ற முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. ‘அரசன்’ இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் (எஸ்.டி.ஆர்.) நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம், அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வடசென்னை பின்னணியில் ‘அரசன்’ திரைப்படம் வடசென்னையை மையமாக கொண்ட கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி விலகவில்லை இதற்கிடையே, ‘அரசன்’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், அந்த தகவல் உண்மையில்லை என்றும், விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகவில்லை என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/vijay-sethupathi-has-not-opted-out-of-the-movie-arasan-key-update-revealed




