லண்டன், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து 290 ரன்கள் இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் லண்டனில் கடந்த 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் 110 ரன்கள் இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீரர் ராபின்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து 208 ரன்கள் இதனை தொடர்ந்து 180 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் லாரன்ஸ் அதிகபட்சமாக 54 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் முகமது அப்பாஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 389 ரன்கள் இலக்கு இதன் மூலம் பாகிஸ்தான் வெற்றிபெற 389 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, 389 ரன்கள் இலக்கை நோக்கி 4ம் நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் ஆட்டம் பாதிப்பு அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெற்றிபெற இன்னும் 295 ரன்கள் எடுக்க வேண்டும். இங்கிலாந்து வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். பாகிஸ்தான் வீரர்கள் ஷான் மசூத் 20 ரன்கிலும், ஷகில் 53 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து வீரர் ராபின்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். களமிறங்கி 2வது இன்னிங்சில் விளையாட உள்ளது. 389 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாட உள்ள நிலையில் இப்போட்டியிலும் இங்கிலாந்தே வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/england-pakistan-test-rain-interrupts-play




