திருமலை, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு 116 வயது மூதாட்டி 3,550 படிக்கட்டுகள் ஏறி சாமி தரிசனம் செய்தது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை வழிபட தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அவர்களில் பலர் திருப்பதியிலிருந்து அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு வழியாக மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே திருமலைக்கு சென்று ஏழுமலையானை வழிபடுவதை பாக்கியமாக கருதுகின்றனர். 116 வயது மூதாட்டி 3,550 படிக்கட்டுகள் ஏறி சாமி தரிசனம் இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 116 வயது மூதாட்டி, வெங்கடேஸ்வர சுவாமி மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியால் திருப்பதிக்கு வந்தார். தள்ளாடும் வயதிலும் தனது குடும்பத்தினரின் உதவியுடன் நடைபயணமாக மலைப்பைாதயில் 3 ஆயிரத்து 550 படிக்கட்டுகள் ஏறி 9 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று திருமலையை அடைந்தார். பின்னர் அவர் திவ்யதரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். சமூக வலைதளங்களில் வைரல் வயதையும் பொருட்படுத்தாமல் 116 வயது மூதாட்டி ஒருவர், திருமலை மலைப்படிகளை ஏறிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பக்தர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/116-year-old-woman-climbs-3550-steps-to-see-lord-shiva-in-tirumala




