குவைத் சிட்டி, குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 12ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் இரு தரப்பும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இரு தரப்பும் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது நேற்று முன் தினம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. குவைத் மீது ஈரான் தாக்குதல் இந்நிலையில், குவைத் மீது ஈரான் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால், ஈரான் ஏவிய ஏவுகணைகளை குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/iran-attack-on-kuwait




