சென்னை, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசியில் அடுத்தடுத்து நடந்த வெடிவிபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி ஆகிய இரண்டு இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த கோர வெடிவிபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், சொல்லொணா வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/workers-killed-in-firecracker-factory-accident-in-srivilliputhur-sivakasi-manickam-thakur-mp-condoles



