சூப்பர் டீலக்ஸ், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை மிருணாளினி ரவி. நேற்று (ஆகஸ்ட் 1), தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் தன்னுடைய காதலை ரிவீல் செய்துள்ளார் இவர். காதலர் குறித்த போஸ்ட்டில், "உன்னை நேசிப்பது, கடைசியில் என்னையே நான் நேசித்துக்கொள்வது போல் உணர்கிறேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எந்த உலகத்தில் பிறந்தாலும், என் தேர்வு எப்போதும் நீயாக மட்டுமே இருப்பாய்!" என்று பதிவிட்டுள்ளார். மகா விஷ்ணு - மிருணாளினி ரவி இவருடைய காதலர் யார்? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, "முற்பிறவியில் செய்த பாவங்களின் காரணத்தால் தான் ஒருவர் இந்தப் பிறவியில் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்" என்று பேசி, விமர்சனங்களுக்கு உள்ளான பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வந்த மகா விஷ்ணுவே இவருடைய காதலர். இந்தப் பேச்சின் காரணமாக, 'மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கிறார்' என்று மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். இதன் பிறகு, கடந்த ஆண்டு, மகா விஷ்ணு தனது பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்திருந்தார். இப்போது இவரை மிருணாளினி ரவி காதலிப்பதாக அறிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/actress-mrinalini-ravi-confirms-relationship-on-instagram




