மதுரை, தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம் வழங்கும் தமிழக முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரது வருகையையொட்டி மதுரை மாநகர் முழுவதும் மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள வினோத போஸ்டர்கள் பொதுமக்களையும் அரசியல் விமர்சகர்களையும் பார்க்க வைத்துள்ளன. குழந்தையுடன் விஜய் - மறுபக்கம் திரிஷா மதுரையின் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டர்களில், ஒருபக்கம் பச்சிளம் குழந்தையை முதல்-அமைச்சர் விஜய் கையில் ஏந்தியிருக்கும் படம் அச்சிடப்பட்டுள்ளது. மறுபக்கம் நடிகை திரிஷாவின் படம் இடம்பெற்றுள்ளது. அதில், "தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் இல்லை என்று வருத்தப்படும் தாய்மார்களுக்குத் தன்னையே தாய்மாமன் என்று கூறி மகிழ்ச்சியடையும் தமிழக முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி" என்ற வாசகங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. விவாதங்கள் விஜய்யின் மதுரை வருகையையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டர் விவாத பொருளாகியுள்ளது. திரிஷா த.வெ.க-வில் இணையவுள்ளார் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற வதந்திகளுக்கு மத்தியில் இது நடந்துள்ளது. முன்னதாக, மதுரையில் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்ட போதே, திரிஷாவை அரசியலுக்கு அழைத்து அவரது ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. தற்போது அரசு விழா மேடைகளிலும், முதல்-அமைச்சரின் சில அரசியல் நிகழ்வுகளிலும் திரிஷா மற்றும் அஜித்குமார் ஆகியோரின் புகைப்படங்கள் தொண்டர்களால் பயன்படுத்தப்பட்டு வருவது சினிமா எல்லையை தாண்டி, தமிழக மாற்று அரசியல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/vijay-thai-maman-gold-ring-scheme-trisha-fans-poster-row




