மங்களூரு மங்களூரு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 8 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவின் மங்களூரு நகரில் உள்ள மங்களூரு சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் என்ற பெயரில் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திடீரென்று ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. ஒருவர் பலி இதில் சிக்கி தொழிலாளி ஒருவர் பலியாகி உள்ளார். 8 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், கர்நாடக மந்திரி யூ.டி. காதர் சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இது திடீரென்று ஏற்பட்ட, அதிர்ச்சி தரும் சம்பவம் ஆகும். இதனை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் உடனடியாக கவனத்தில் கொண்டு, அடுத்தடுத்த விசயங்கள் பற்றி கேட்டறிந்து உள்ளார் என்றார். இந்த வெடிவிபத்து பற்றி விசாரிக்க மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/explosion-at-mangaluru-factory-one-dead-8-injured




