சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு இன்றும் மற்றும் நாளை (ஜூலை 4, 5) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு தாள் 1 தமிழகம் முழுவதும் தொடங்கியது. ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு முதல் தாள் மொத்தம் 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 12,001 ஆண்கள், 49,385 பெண்கள், 1,321 மாற்றுத்திறனாளிகள் தகுதி தேர்வை எழுதுகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாளை தேர்வை 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் எழுதுகின்றனர். பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2025- ஆம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும், அந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டு ஆண்டிற்குள் அனைத்து ஆசிரியர்களும் தகுதிப் பெற வேண்டும் எனவும், அப்படி தகுதிப் பெற விரும்பாதவர்கள் அவர்களுக்கான சலுகைகளுடன் ஓய்வுப் பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது. பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு தேர்விற்கு பிப்ரவரி 13- ஆம் தேதி அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-special-eligibility-test-paper-1-has-started-across-tamil-nadu




