வாஷிங்டன், அமெரிக்க இடைத்தேர்தலில் எனக்கு ஓட்டுப் போட்டால் ரூ.4½ லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு சற்று சுமாராகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறி வரும் நிலையில், நேற்று அதி ரடி தேர்தல் அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். டல்லாஸ் நகரில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய அவர், இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், அமெரிக்காவில் உள்ள அனைத்துப் பெரியவர்களுக்கும் சுமார் ரூ.4% லட்சம் (5,000 டாலர்) 'டிரம்ப் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மேடையை அதிர வைத்துள்ளார். ஈரானுடனான போர் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் அதிருப்தியில் இருக்கும் வேளையில், வாக்காளர்களைக் கவர டிரம்ப் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளார். ஆனால், இந்தத் திட்டத்துக்கு சுமார் ரூ.95 லட்சம் கோடி (1 டிரில்லியன் டாலர்) செலவாகும் என்பதால், இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/trump-announces-rs-4-lakh-incentive-if-you-vote-for-me-in-us-midterm-elections




