சென்னை, தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘ஓஹோ எந்தன் பேபி’ பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள ‘ஜி.டி.என்’ படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா கோவை செட்டிபாளையத்தில் உள்ள ஜி.டி.நாயுடு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. நடிகர்கள் சத்யராஜ், ஜெயராம், நடிகைகள் பிரியாமணி, துஷாரா விஜயன், இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் உள்ளிட்ட படக்குழுவினரும், ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். விழாவுக்கு முன்பாக, ஜி.டி.நாயுடு தயாரித்த முதல் பேருந்து மற்றும் பழமையான கார்கள் அணிவகுத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பழமையான வாகனங்களிலேயே படக்குழுவினர் விழா அரங்கிற்கு வருகை தந்தனர். ஜி.டி.நாயுடுவின் சாதனைகளையும் அறிவியல் பங்களிப்பையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விரைவில் திரைக்கு வரும் என டிரெய்லரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘ஜி.டி.என்’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. trailer is brilliant & amazing from sir. After ##Rocketry முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/madhavans-gdn-film-trailer-out




