தாராபுரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் ராஜரத்தினம் என்பவர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் கிராமம், கிராமமாக குக்கருடன் சென்று வாக்கு சேகரிதது வருகிறார். அதன்படி நேற்று தொப்பம்பட்டி, நஞ்சியம்பாளையம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்டு வேட்பாளர் ராஜரத்தினம் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், தேர்தலில் வெற்றி பெற்றால், குக்கர் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் அங்கிருந்த பெண் வாக்காளர் ஒருவர் இப்போதே ஒரு குக்கர் கொடுங்கள் என்று கேட்டார். வெற்றி பெற்றதும் புது குக்கர் தருகிறோம் என சொல்லிவிட்டு சென்றனர். அப்படி என்றால் இப்போது குக்கர் தராமாட்டீர்களா? என கேட்டு வேட்பாளரை மிரள விட்டார். இதனால் அங்கு கலகலப்பான சூழல் நிலவியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/woman-voter-asks-independent-candidate-for-a-pressure-cooker-an-interesting-moment-during-the-dharapuram-campaign




