அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், நயன்தாரா, கவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, " நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் ‘Power Couple’. அவர்கள் வெற்றியைப் பார்த்து நான் நிறைய முறை சந்தோஷப்பட்டிருக்கிறேன். Hi movie நன்றி தெரிவிக்கும் விழாவுக்கு நயன்தாரா ஏன் வரவில்லை. பிறகு நன்றி சொல்வார்களா? அவர் சார்பாக நானே நன்றி சொல்லிக்கொள்கிறேன்" என்று கிண்டலாக பேசினார். தொடர்ந்து, "நயன்தாரா பார்ப்பதற்கு மென்மையானவர் போல தெரிந்தாலும், மனதளவில் மிகவும் கடினமானவர். உங்களைப் பார்க்கும்போது நீங்கள் எப்படி இவ்வளவு சக்சஸாக இருக்கிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது என்று அவரிடமே கூறியிருக்கின்றேன். மிகவும் பொறுமையானவர். இந்தப் படத்தின் பயணத்தில் எல்லோரும் சிறப்பாக நேரத்தை செலவிட்டு சந்தோஷமாக இருந்தோம்" என்று பேசியிருக்கிறார். "இந்தத் தந்திரத்தில் நாங்கள் வீழ மாட்டோம்"- விஜய் உடனான சந்திப்பு குறித்து மாணிக்கம் தாகூர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/radhika-speech-at-hi-movie-thanks-giving-meet




