காசா நகர் காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்களில் 9 பேர் பலியாகி உள்ளனர். காசா நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், பாலஸ்தீனியர்களில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பின் உள்கட்டமைப்பை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடந்தது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. இதன்படி, நசர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது நடந்த தாக்குதலில், 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள் ஆவர். இதேபோன்று, ஜெய்துன் பகுதி மக்கள் மீது நடந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி விட்டனர். மற்றொருவர் காயமடைந்து இருக்கிறார். இதனை சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/gaza-9-palestinians-killed-in-israeli-attack




