சென்னை, காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று பதிலளித்து பேசினார். அப்போது திமுக மீது அமலாக்கத்துறை வைத்த பல குற்றச்சாட்டுகள் பற்றி பேசியிருந்தார். கடந்த திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் திமுக ஊழல் செய்திருக்கிறது. கட்சி நிதி என்கிற பெயரில் உதயநிதிக்கும், மு.க ஸ்டாலினுக்கும் பணம் சென்றிருக்கிறது என்று அமலாக்கத்துறை கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் பிறகு முதல்-அமைச்சரின் பதிலுரை மீது பேச அனுமதிக்குமாறு கூறி தி.மு.க.உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, தி.மு.க.உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - திசைதிருப்பும் உத்திகள் - மொத்தத்தில் எந்த தயாரிப்பும் இல்லாமல், ரோல் கேமரா, ஆக்சன் மோடில் Cringe டயலாக் பேசி இருக்கிறார் டம்மி CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், அடுத்த முறை நன்றாகத் தயாராகுங்கள். இன்னும் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யுங்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-three-days-to-read-ed-charges-udayanidhi-stalin



