சென்னை, யானைகள் வழித்தடங்களை அறிவிப்பது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வனத்துறை தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 41 யானைகள் வழித்தடங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக அதில், “ஜவளகிரி, அஞ்சட்டி, பில்லிக்கல் உள்ளிட்ட 3 வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இது தவிர 12 வழித்தடங்களை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஒரு சில வழித்தடங்கள் கைவிடப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இறுதி செய்யப்பட்ட 3 யானை வழித்தடங்கள் குறித்து விரைந்து அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதேபோல தடாகம் பள்ளத்தாக்கில் சீமை கருவேல மரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பான வழக்கில், சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு ஆரம்ப கட்ட நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாவட்டங்களில் உள்ள பசுமை நிதியை பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/high-court-orders-tamil-nadu-government-to-promptly-notify-elephant-corridors




