நெல்லை, பணகுடி அருகே நான்குவழிச்சாலையில் ஸ்கூட்டி மீது லாரி மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோழிப்பண்ணைக்கு சென்றபோது விபத்து நெல்லை மாவட்டம் பணகுடி புஷ்பவனம் ரோடு காமராஜர் நகரைச் சேர்ந்த வெங்கடேஷ்குமாரின் மனைவி ஜெகதா (42). பணகுடி நெரிஞ்சிகாலனி அன்னை நகரைச் சேர்ந்த அறிவழகனின் மனைவி மரிய விஜயா (42), பாப்பா (50). இவர்கள் 3 பேரும் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு ஊசி போடும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை பணகுடி அருகே பாம்பன்குளம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைக்கு 3 பேரும் ஸ்கூட்டியில் புறப்பட்டுச் சென்றனர். ஜெகதா ஸ்கூட்டியை ஓட்ட, மரிய விஜயா மற்றும் பாப்பா ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். ஸ்கூட்டி மீது லாரி மோதல் பாம்பன்குளம் அருகே நெல்லை-குமரி நான்குவழிச்சாலையில் ஸ்கூட்டி சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி, ஸ்கூட்டியின் பின்புறத்தில் மோதியது. மோதிய வேகத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது சாலையில் விழுந்த மரிய விஜயா மீது லாரி ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஜெகதா மற்றும் பாப்பா ஆகியோர் உயிருக்கு போராடினர். மற்றொரு பெண் பலி விபத்து குறித்து தகவல் அறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த ஜெகதா மற்றும் பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகதா நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரணை இந்த விபத்து குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/horrific-accident-in-nellai-lorry-hits-scooter-two-women-killed




