கேப் டவுன், தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர் ஜேடன் அடம்ஸ் (வயது 25). இவர் தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியில் நடுகள வீரராக விளையாடி வந்தார். நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்காக 3 ஆட்டங்களில் ஜேடன் அடம்ஸ் விளையாடியுள்ளார். நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 32 சுற்றில் கனடாவுடனான தோல்வியையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஜேடன் அடம்ஸ் மர்ம மரணம் இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி நாடு திரும்பியது. அணியின் நட்சத்திர வீரர் ஜேடன் அடம்ஸ் தலைநகர் கேப் டவுன் அருகே உள்ள புறநகர் பகுதியான ஸ்காட்கெலொப் பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். அவர் இன்று காலை மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று ஜேடன் அடம்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடம்ஸ் மரணத்திற்கான காரணம் என்ன? அவரை யாரேனும் கொலை செய்தனரா? தற்கொலை செய்துகொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேடன் அடம்ஸ் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/south-africa-world-cup-midfielder-adams-dies-aged-25




