திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் 4-ம் பாகம் உருவாகவுள்ளது எனத் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தெரிவித்திருக்கிறார். கடந்த மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'திரிஷ்யம் 3', வெளியான சில நாட்களிலேயே ரூ.100 கோடி வசூல் சாதனையுடன் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பதிவு செய்தது. ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், மோகன்லால் 'ஜார்ஜ்குட்டி' கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். ஜீத்து ஜோசப் இதற்கிடையில் 'தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' இதழுக்கு இயக்குநர் ஜீத்து ஜோசப் பேட்டியளித்திருந்தார். அதில், `` ஒவ்வொரு பாகம் முடியும்போதும், அடுத்த பாகத்திற்கான கதையை யோசிக்குமாறு தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். முதல் பாகத்திற்குப் பிறகு இரண்டாவதையும், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது மூன்றாவது பாகத்தையும் யோசிக்கச் சொன்னார்கள். இப்போது நான்காம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்குமாறு கூறுகிறார்கள். இருப்பினும், 'திரிஷ்யம் 3' வசூல் சாதனை படைத்ததற்காக அவசர அவசரமாக அடுத்த பாகத்தை எடுக்க விருப்பமில்லை. கதாபாத்திரங்களின் அடுத்தகட்ட வளர்ச்சியைப் பற்றி யோசித்து நிதானமாகவே கதையை உருவாக்க விரும்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், மனோரமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆண்டனி பெரும்பாவூர், ``திரிஷ்யம் படத்தின் அடுத்த பாகம் நிச்சயம் உருவாகும். இதை நான் மனதார, முழு நம்பிக்கையோடு கூறுகிறேன்" என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். Mohanlal: 'ஆர்வம் தரும் கதைகள்'; ஒரே நேரத்தில் 7 இயக்குநர்களின் படம்; மோகன்லால் தந்த சர்ப்ரைஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/mollywood/producer-antony-perumbavoor-has-announced-that-a-fourth-part-of-drishyam-will-be-made



