பிஜீங், சீனாவின் சோங்க்சிங் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பாறைகள் சரிந்து சாலைகள் மூடப்பட்ட நிலையில், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பயங்கர நிலச்சரிவு சீனாவின் சோங்க்சிங் நகரில் இன்று காலை 9.08 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் மலைச்சரிவின் கீழ் பகுதியில் இருந்த பல குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து நொறுங்கியுள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் சுமார் 100 மீட்புக்குழுவினரும் 200 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரைக் காணவில்லை என கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்லனர். அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டதற்கான உடனடி காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிசிடிவி வெளியீடு சிசிடிவி வெளியிட்ட காட்சிகளின்படி, வான்வழிப் படக்காட்சிகள், ஆற்றங்கரையில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் மீது பாறைகளும் இடிபாடுகளும் விழுவதைக் காட்டுகின்றன. அதே நேரத்தில் மக்கள் தங்களுக்குப் பின்னால் எழும் அடர்ந்த தூசிக் கூட்டத்திற்கு மத்தியில் தப்பி ஓடுவதையும் காண முடிகிறது. காணொளி ஒன்றில் மலையின் ஒரு பகுதி சரிந்து கீழே உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மீது விழுவதையும், இதனால் இடிபாடுகள் சாலையில் சிதறி, அவ்வழியாகச் சென்ற கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் உடனடியாக நிறுத்தப்படுவதையும் காட்டுகிறது. சீனாவில் பயங்கர நிலச்சரிவு! சீனாவின் சோங்க்சிங் நகரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. பாறைகள் சரிந்து சாலைகள் மூடப்பட்ட நிலையில், பலர் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.#China … — Thanthi TV (@ThanthiTV) July 17, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/rescuers-conduct-search-and-rescue-operation-on-the-site-of-the-landslide-in-pengshui-county-in-southwestern-chinas-chongqing




