நத்தம், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திருச்சிக்கு எதிராக டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டிஎன்பிஎல் 10-வது டிஎன்பிஎல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். முதல் வெற்றி நேற்று நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது. டாஸ் வென்ற திருச்சி இன்று (புதன்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. சேப்பாக் - நெல்லை இன்றைய 2-வது லீக் ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-cricket-madurai-wins-toss-against-trichy-elects-to-bowl




