சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி 29.08.2026- ம் தேதி கைது செய்யப்பட்டார். வீரமணிக்கு உதவிய குற்றச்சாட்டில் அவரின் தோழியான சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூன்று பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தொழிலதிபர் வீரமணியை போலீஸ் காவலில் எடுத்து சென்னை போலீஸார் விசாரித்தனர். 84 வயதான வீரமணியை வெளியில் அழைத்து வந்து விசாரிப்பதில் சில சிக்கல்கள் இருந்ததால், சிறப்பு அனுமதி பெற்று புழல் சிறையிலேயே போலீஸார் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸாருக்குக் கிடைத்தன. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். கைது இந்த நிலையில்தான் வீரமணிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட கணேசன் என்பவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் சிறுமியுடன் வீரமணி இருக்கும் வீடியோ இருந்தது. அந்த வீடியோ குறித்து கணேசன், காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. அதனால் அவரை போலீஸார் கைதுசெய்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால், கைதுசெய்யப்பட்ட கணேசன், 23 ஆண்டுகளாக வீரமணி நடத்தி வரும் ஜெம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். தற்போது வேறு ஒரு நிறுவனத்தில் கணேசன் வேலை செய்து வருகிறார். இவருக்கு வீரமணியின் ரகசியங்கள் தெரியும் என்பதால், அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். கணேசனுக்கு சிறுமியின் ஆபாச வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணை நடந்து வருகிறது. கணேசன் வாயை திறக்கும் போது இன்னும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என்று சொல்கிறார்கள் சென்னை போலீஸார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/gem-veeramani-ex-employee-arrested-in-chennai



