சென்னை, தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்" நேற்று முதல் முறைப்படி தொடங்கப்பட்டது. மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், முதல்-அமைச்சர் விஜய் கலந்துகொண்டு இந்த புதிய திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். 37 குழந்தைகள் விழாவில், அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் தனது கைகளாலேயே தங்க மோதிரங்களை அணிவித்து, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். முதற்கட்டமாக 37 குழந்தைகளுக்கு மோதிரங்கள் அணிவிக்கப்பட்டன. ஜூன் 22 முதல் அமல் இந்த திட்டத்தின்படி, முதல்-அமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதி முதற்கொண்டு அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்த தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும். 1.07 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த வகையில், கடந்த ஜூன் 22 முதல் செப்டம்பர் 27-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 1.07 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்க ஏற்பாடு இத்திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 22-க்கு பிறகு பிறந்து ஏற்கனவே டிஸ்சார்ஜ் ஆகி வீடுகளுக்கு சென்ற லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு இந்த மோதிரங்கள் எப்படி வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. அவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஆஸ்பத்திரிக்கு வந்தால் பெரிய அளவில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்ற அச்சமும் நிலவியது. 107 சிறப்பு மையங்கள் இதற்காக அரசு நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தமிழகம் முழுவதும் 107 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஒவ் வொரு மாவட்டத்திலும் 4 அல்லது 5 மருத்துவமனைகளில் இந்த மோதிரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே டிஸ்சார்ஜ் ஆன குழந்தைகளுக்கு, இந்த மையங்கள் மூலமாக தினசரி 100 குழந்தைகள் வீதம் பிரித்து மோதிரங்கள் பாதுகாப்பாக விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி தகவல் இதற்காக ஒவ்வொருவரும் எந்தெந்த தேதியில் வர வேண்டும் என்ற விவரம் செல்போன் குறுஞ்செய்தி மூலமும், உள்ளூர் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் பிறக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும்போதே மோதிரம் கைகளில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பதால், இந்தத் தொகுதிகள் அடங்கிய செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பிறகு தங்க மோதிரம் வழங்கப்படும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-ring-scheme-for-107000-babies-born-since-june-22




